
20 இறக்குமதியாளர்கள் முட்டை விலை சமர்ப்பிப்பு
20 இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை முட்டை இறக்குமதி டெண்டருக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பான டெண்டர் அழைப்பு இன்று திங்கட்கிழமை பிற்பகல் நிறைவடைந்ததாகவும், இறுதி அனுமதிக்காக வர்த்தக அமைச்சின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
முட்டை இறக்குமதி ஒப்பந்தத்திற்கு சமர்ப்பித்த அனைத்து இறக்குமதியாளர்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்பவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
