35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கு முட்டை விற்பனை
அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டை வாங்க முடியாத ஏழை மக்களுக்கு இலவச முட்டை வழங்கவும் சங்கம் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒரு முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என தெரிவி;தார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல நகரங்களை மையப்படுத்தி நேற்று முட்டை விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல முட்டை உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
எனினும், சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாய்க்கு விற்கப்படுவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.