கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பதற்றம்
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள இருப்பதாக கூறியே இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது
அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெண் மாணவர்கள் அதிகமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.