பாண்டிருப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திரன் காலமானார்

 

-கல்முனை நிருபர்-

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவரும் இத்தாலியில் வசிப்பவருமான சமூக ஆர்வலர் ராஜு ராஜேந்திரன் (57வயது) கொழும்பில் காலமானார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பாண்டிருப்பு கிராமத்தில் ஆலயங்கள்,. விளையாட்டுக்கழகம் ,. சமூக நல அமைப்புக்களில் உறுப்பினராக இருந்தவர் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான பாண்டிருப்பில் நடைபெற்றது

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க