சுவிட்சர்லாந்தில் இன்று பூமி அதிர்ந்தது
சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவையானது ஷ்விஸ்; மாநிலத்தில் இன்று நண்பகல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
சுவைஸ் மாநிலத்தின் (Kanton Schwyz) மையப்பகுதியில் இருந்து தென்மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 2:34:32 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் சுவிட்சர்லாந்து முழுவதும் உணரப்பட்டுள்ளதாக சுவிஸ் நில அதிர்வு சேவையானது தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இந்த அளவு நிலநடுக்கத்தில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்