DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டி : காத்தான்குடி மத்திய கல்லூரி சாம்பியன்!

-மட்டக்களப்பு நிருபர்-

DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியை எதிர்த்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரியானது, முதல் செட்டில் 18:25 என்று பின்னடைவை சந்தித்தாலும், இரண்டாவது செட்டில் 25:14 மூன்றாவது செட்டில் 25:11 என்று முன்னிலை வகித்து, இறுதியில் 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து, மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.