
“டொனால்டுக்கு ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல அமெரிக்காவில்” – டிரம்புக்கு எதிராக பெறாமகள்!
டொனால்ட் டிரம்பின் மூத்த சகோதரரின் மகளான மேரி எல். டிரம்ப் (Mary L. Trump) தன்னுடைய எக்ஸ் (X) தளப் பதிவில், “டொனால்டுக்கு இறுதியில் ஆட்சி மாற்றம் (Regime change) கிடைக்கப்போகிறது—ஆனால் அது ஈரானில் அல்ல, அமெரிக்காவில். மன்னர்கள் யாரும் இங்கே கிடையாது (No Kings)” என தெரிவித்துள்ளார்.
மேரி டிரம்ப் தனது சித்தப்பா டொனால்ட் டிரம்பின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சிப்பவர்.
அமெரிக்கா ஈரானில் “ஆட்சி மாற்றத்தை” ஏற்படுத்திவிட்டதாக டொனால்ட் டிரம்ப் மார்ச் 24 அன்று செய்தியாளர்களிடம் கூறியதற்குப் பதிலடியாக மேரி இதை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நடத்தும் போராட்டங்களில் “No Kings” இந்த வாசகம் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா ஒரு ஜனநாயகம் என்றும், அங்கு மன்னராட்சிக்கு இடமில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
2026-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஈரானுடனான போர் பதற்றங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் காரணமாக டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையிலேயே மேரி எல். டிரம்ப் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
