வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு அதிகரிப்பு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வங்கியின் சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடுகளின் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.எம்.என்.ஜீவந்த தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணம் நாட்டுக்கு வருவது குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக நாட்டிற்கு டொலர் கிடைப்பதால் அத்தியாவசியப் பொருட்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்து 78,392 என்பது குறிப்பிடத்தக்கது.