மூதூர் தள வைத்தியசாலை வைத்தியர்களும் போராட்டத்தில் இணைந்தனர்!

-மூதூர் நிருபர்-

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று செவ்வாய்கிழமை விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக, வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதேவேளை, அவசர சேவைப் பிரிவு வழமைபோன்று இயங்கியது.

தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வருகைதந்த நோயாளர்கள், ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.

பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடளாவிய ரீதியில் இன்று விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதற்கு மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஆதரவு வழங்கினர்.