
நட்சத்திரக் கோட்டை வளாகத்தில் டச்சு-சிலோன் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
மாத்தறை நட்சத்திரக் கோட்டை வளாகத்தில் டச்சு-சிலோன் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கோட்டைக்குள் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக பயன்பாட்டுக் கம்பம் அமைப்பதற்காக தொழிலாளர்கள் குழி தோண்டிய போதே இந்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் கலைப்பொருட்கள், பீங்கான் துண்டு, புகை பிடிக்கும் குழாய், களிமண் பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மாத்தறை நீதவான் நீதிமன்றில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மாத்தறை நீதவான் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் மீட்கப்பட்ட குழியை ஆய்வு செய்துள்ளார்.
மாத்தறை நட்சத்திரக் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் தொல்பொருள்களை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, அதே நேரத்தில் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடர தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்தியது.
மீட்கப்பட்ட தொல்பொருட்கள் டச்சு-இலங்கை காலனித்துவ காலத்தை சேர்ந்தவை என தொல்பொருள் திணைக்களம் உறுதிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.