நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கு
-யாழ் நிருபர்-
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று புதன்கிழமை கோப்பாய் தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
நீரிழிவு விழிப்புணர்வு செயற்பாடானது யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு கழகத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுவதோடு விழிப்புணர்வு செயற்பாட்டில் வைத்திய கலாநிதிகள் விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர்.
