தொடருந்துச் சேவைகளில் தாமதம்
சமிக்ஞைக் கோளாறு காரணமாக பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்துச் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்லேவெல – மீரிகம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும், கம்பஹா – வெயாங்கொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும் சமிக்ஞைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களத்தின் பிரிதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் தொடருந்துப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்