
மகளின் திருமணநாளில் தந்தைக்கு மாரடைப்பு
மகளின் திருமண நாளன்று, தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
தனது திருமண நாளன்று, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த தந்தை திடீர் மாரடைப்பால் நடுவீதியிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த திருமண வைபவம் உடுநுவர பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குறித்த தந்தை தன்னுடைய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டியவில் இருந்து வெலம்பட எனும் இடம்வரைக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
அவ்வேளை, கணவன் செலுத்திச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தவறான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தது. இதுதொடர்பில் மனைவி, அறிவுறுத்தியும் அது அவரது காதுகளில் விழவில்லை.
எனினும், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவர், அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், தனக்கு நெஞ்சு வலிக்கிறது. மூச்செடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை நிறுத்திய பொலிஸார், அவரை அவரது மனைவியுடன் முச்சக்கர வண்டியில் ஏற்றி கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், நாவலப்பிட்டியைச் சேர்ந்த மீரா சையிப் மொஹமட் சாலி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார.