
பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் உயிரிழப்பு
தமது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.
தாயினால் விஷமூட்டப்பட்ட வந்த ஐந்து வயது சிறுவன், கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்தான்.
இவர்கள், கம்பஹா மாவட்டத்தின், லோலுவாகொட – தலாஹேன பிரதேசத்தில் வசித்து வந்தவர்களாவர்.
அண்மையில், குறித்த தாய் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன், தானும் விஷமருந்தியுள்ளார்.
இந்த நிலையில் விஷம் அருந்திய எட்டு வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.