
தொழில்நுட்பக் கல்லூரி விடுதிக்குள் இருந்து மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு
ஹோமாகம, தியகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவரொருவர் வளாக விடுதிக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பொத்துஹெரவை வசிப்பிடடாக கொண்ட 25 வயதுடைய கல்லூரியின் இரண்டாம் வருட மாணவராவார்
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி விடுமுறை முடிந்து திரும்பிய மாணவன், அவனது ரூம்மேட் இன்னும் திரும்பாததால் விடுதி அறையில் தனியாக தங்கியிருந்தான்.
மறுநாள் மதியம் வரை, குறித்த மாணவன் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மற்றொரு நண்பர், விடுதி அறையில் சென்று பார்த்த போது அம்மாணவன் படுக்கையில் தூங்குவதைக் கண்டார்.
அப்போது அவரை எழுந்திருக்குமாறு குறித்த நண்பன் அழைத்திருக்கிறார். எனினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. அதனால் அவரை எழுப்புவதற்காக பக்கத்தில் போய் தொட்டு எழுப்பியுள்ளார் அப்போது அவரது உடல் குளிர்ந்திருப்பதை நண்பர் உணர்ந்தார்.
அதன் பின்னர், மாணவனின் நண்பன் இது தொடர்பாக விடுதி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் ஹோமாகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், உடலை பரிசோதித்த மருத்துவர்கள்இ அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.