நாவிதன்வெளியில் நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம்பழ விநியோகம்

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்காக நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நளீர் பௌன்டேஷன் ஸ்தாபக தலைவரும், நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது நளீர் பௌன்டேஷன் நிர்வாகிகள் பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் பேரிச்சம் பழ பொதிகளை வழங்கினர்.

குறிப்பாக சாளம்பைக்கேணி 1ஆம் வட்டார பள்ளிவாசல் மற்றும் 2ஆம் வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் பேரிச்சம் பழ பொதிகள் முறையாக கையளிக்கப்பட்டு இந்த வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் சமூக ஒற்றுமை, பகிர்வு மனப்பான்மை மற்றும் ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பண்புகள் வலுப்பெறும் வகையில் நளீர் பௌன்டேஷன் தனது சமூகப் பொறுப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்த முயற்சியை பாராட்டியதுடன், கடந்த காலங்களிலும் தற்போதும் சிறப்பாக இப்படியான பணிகளை செய்யும் நளீர் பௌன்டேஷன் எதிர்காலத்திலும் இத்தகைய சமூக நல நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.