பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஆபத்தான நிலை : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
-பதுளை நிருபர்-
பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள கட்டிடமொன்றில் மின் மீற்றர் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதால் பேருந்தில் பயணிப்பவர்கள் உட்பட பெருமளவான மக்கள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்று நான்கு ஆண்டுகளாக இந்த பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும், இதை சரி செய்ய எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த மின் மீற்றர்களின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின் பெட்டிகள் உடைந்துள்ளதாகவும், மின் மீட்டர்களுக்கு இணைப்புகள் வழங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள பிரதான மின் கம்பிகள் பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த பாதுகாப்பற்ற மின் மீற்றர் பொருத்தப்பட்டுள்ள பகுதிக்கு அருகில் இலங்கை வங்கி பண பெறும் ATM இயந்திரமும் காணப்படுகிறது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் இவ் இடத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது
பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது பாதுகாப்பற்ற நிலையில், மின்கசிவால் உயிர் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே அதிகாரிகள் கவனம் செலுத்தி சீர்திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்