சூறாவளி புயல் அடுத்த சில நாட்களில் தீவிரமடையலாம்: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று, பின்னர் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி புயலின் விளைவாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் ,டியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்; தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், தீவு முழுவதும் குறிப்பாக பிற்பகல் அல்லது ,ரவு வேளையில் மழை அல்லது ,டியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
,டியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக, பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
