உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.27 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.