உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று உயர்ந்துள்ளது.
நத்தார் பண்டிகை மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கியக் காரணமாகும்.
அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 83 டொலராகவும் WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79.50 டொலர் ஆக விற்பனை செய்யப்பட்டது.