உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவைக் காட்டுகிறது.

சமீபத்திய தகவல்களின்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 2.16 சதவீதம் சரிந்து 87.62 டொலராகவும்,  டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 1.56 குறைந்து  80.08 டொலர்களாக பதிவாகியுள்ளது.