
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்வு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை 88.96 டொலராக இருந்த டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று திங்கட்கிழமை நிலவரப்படி 89.67 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் 93.94 டொலராக காணப்பட்டது, இன்று அது 96.77 டொலராக பதிவாகியுள்ளது.
