4.5 பில்லியன் மதிப்புள்ள குற்றவியல் சொத்துக்கள் பறிமுதல்

குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை விசாரிப்பதற்காக புதிய பிரிவை இலங்கை காவல்துறை நிறுவ உள்ளதாக, மேற்கு மாகாண (வடக்கு) துணை காவல் துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

குற்றத்திலிருந்து பெறப்பட்ட சொத்துக்கள் குறித்த சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விதிகளின் கீழ் இந்தப் பிரிவு தொடங்கப்படும் என , சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

இந்தப் பிரிவு, பெறப்பட்ட சொத்துக்கள் மீதான காவல்துறை குற்றவியல் விசாரணை ((PCID) என்று அழைக்கப்படும்.

இதற்கிடையில், சிறப்பு நடவடிக்கைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய ரூ.4.5 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இவற்றில் கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், நிலம், தங்க நகைகள், படகுகள் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்ட ரூ.57 மில்லியன் ரொக்கப் பணம் ஆகியவையும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.