
கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம், அரியாலை – குசவம்பலம் வீதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் கைக்குண்டு இருப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் குறித்த குண்டானது யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் பி.ப 3.00 மணியளவில் யாழ்ப்பாண சிறப்புப் படை அதிகாரிகளால் செயலிழக்கச் செய்யப்பட்டது.