
கைகலப்பின் போது ஒருவர் படுகொலை
மிரிஹான, கங்கொடவில பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை சக ஊழியரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி இரவு இரு நபர்களும் குறித்த வாகன திருத்தும் நிலையத்தில் விருந்து வைத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குவாதத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் மற்றைய நபரைத் தாக்கியதாகவும், அவர் தூங்கிய பின்னர் சந்தேக நபர் அவரை மழுங்கிய பொருளால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வாகன திருத்துமிடத்தின் ஊழியர்களான இரு நபர்கள், வாகன திருத்துமிட வளாகத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பலியானவர் கிரிபாவ, சோலவெவ பிரதேசத்தை சேர்ந்தவர், தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான சந்தேக நபர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.