
உண்மை தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அறிவுறுத்தல்
சீனாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டதன் மூலம் சீனா முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, உயிரிழப்பவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.