மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் ? இதன் அறிகுறி என்ன ?

கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு பொருளாதார பாதிப்பு என மக்களை நிலைகுலையை வைத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்த தொடங்கிய பின்னரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

கொரோனா வைரஸ் உருமாறி அவ்வப்போது அதிவேகமாக பரவினாலும் பாதிப்பு என்பது ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. இந்த நிலையில் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் திடீரென அதிகரிக்க இந்த ஜே.என்.1 கொரோனா தான் காரணமாக உள்ளது.

ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஓமிக்ரான் BA.2.86 வகை அல்லது பைரோலாவின் துணை வேரியண்ட் ஆகும். இந்த வைரஸ் பாதிப்பு முதலில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியபட்டது. அடுத்து டிசம்பர் 15ஆம் திகதி சீனாவில் 7 பேருக்கு இந்த புதுவகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது.

இந்த வகை கொரோனாவின் அறிகுறிகளாக லேசான காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி ஆகியவை உள்ளன. இந்த நிலையில், ஜே என் 1 கொரோனா வைரஸை வேரியண்ட் ஆப் இண்ட்ரெஸ்ட் என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக இந்த புதிய திரிபு இல்லை என்றும் தற்போது கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.