ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா

 

கொழும்பு 13 ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா (2022) ஆலய அறங்காவலர், சபைத் தலைவர், தொழிலதிபர் ரகுநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னினால் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் கௌரவ அதிதிகளாக இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் எஸ்.தனபாலா, சைவ முன்னேற்றக் கழகத் தலைவர் வைத்திய கலாநிதி கே.பிரசாந்தன் மற்றும் பிரித்தானிய சைவம் முன்னேற்றக் கழக முன்னால் செயலாளர் மாணிக்கம் இந்துநேசன் கலந்து கொண்டனர்.

இதன் போது, வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,  பாடசாலை நிர்வாகத்தினால் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.