
போதைப்பொருளுடன் கொழும்பு வாசி கல்முனையில் கைது
-அம்பாறை நிருபர்-
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த நபர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச விடுதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவவின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 9 இலட்சம் பெறுமதியான 25 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
