இலங்கை வானூர்திப் படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம், இன்று புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தை பேருந்து நிறுத்துமிடமாகவும், இரண்டாம் தளத்தை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளத்தை நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







