அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN, MS NOW மற்றும் Politico செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகையில் விதித்திருந்த தடையை நீக்கி, அவர்களின் ஊடக அணுகலை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி டிமோத்தி கெல்லி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடை அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கக்கூடும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி ட்ரம்ப் இந்த மூன்று ஊடக நிறுவனங்களையும் வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்திருந்தார். அவை தன்னைப் பற்றி “பொய்யான செய்திகள்” மற்றும் “புனையப்பட்ட தகவல்களை” வெளியிடுவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிராக CNN, MS NOW மற்றும் Politico நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
வெள்ளை மாளிகை அணுகலை ரத்து செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு உரிய நடைமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என நீதிபதி கெல்லி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அமெரிக்க நீதித்துறை இந்தத் தடையை நியாயப்படுத்த முயன்றிருந்த நிலையில், அந்த விளக்கங்களையும் நீதிபதி கேள்விக்குட்படுத்தியிருந்தார்.










