பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டு திகதியில் மாற்றமா?

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகமாக உருவான இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் திகதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்துஇ ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதேபோல இரண்டாவது பாகத்திலும் சில பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த பாடல்களை வரும் மார்ச் மாதம் பிரம்மாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் திகதி கேட்டுள்ளனர். அவர் திகதியை உறுதி செய்ததும் பாடல் வெளியீட்டு விழா உறுதி செய்யப்படும் என படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் திகதி மாற்றப்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை தொடந்து அந்த செய்தி தவறு என படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.