சிகரெட்டின் விலையை அதிகரிக்க திட்டம்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட்டின் விலையை விலை சூத்திரத்திற்கு ஏற்ப அதிகரிக்க முன்வந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில்  சிகரெட் சில்லறை விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் புகைபிடிக்கும் வயது வந்தவர்களில் ஐம்பத்தொரு சதவீதத்தினர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நம்புவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.