
களுபோவில பகுதியில் சீன நாட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சீன பிரஜை கைது!
கொஹுவலை, களுபோவில பகுதியில் வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் சீனா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி, ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 3 கமராக்கள் மற்றும் 02 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை 26 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
