கோழி இறைச்சி விலை மேலும் குறையும்

கோழி இறைச்சி விலை மேலும் குறையும், என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் பண்டிகைக் காலத்தில்  தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி, 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்