கிழக்கு மாகாண சதுரங்க போட்டி : கல்முனை ஸாஹிரா கல்லூரி சாம்பியன்
-கல்முனை நிருபர்-
Pro Knight Chess அகடமியால் கடந்த 24ம் திகதி கிழக்கு மாகாண மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட Individual Chess Championship போட்டியில் ஆண்களுக்கான 15வயது பிரிவில் ஐ.கே.எம். ஆகில் கான் முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு, எம்.எஸ்.எம். மிஜ்வாத் இரண்டாவது இடத்தையும், எம்.இசட்.எம். ஸனீப் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டதோடு, ஆண்களுக்கான 18வயது பிரிவில் ஐ.எம்.சயான் ஸாஹி முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.சாகிர், விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீர், சதுரங்க பொறுப்பாசிரியர், பாடசாலையின் உடற்கல்வி பிரிவு மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர், மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.