
ஏறாவூரில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள், சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு
-எமது அலுவலக நிருபர்-
ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பன நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழி காட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிகாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன் சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் இரண்டு பெண்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அலியார் , ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் நளீம், ஏறாவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன் , முன்னாள் நகர சபை உறுப்பினர் நிசார் , அஹமட் ஹாஜி, முன்னாள் அதிபர் சயீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



