
ChatGpt- யின் Free version- ல் கிப்லி ஆர்ட் அனிமேஷன் உருவாக்குவது எப்படி?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு விஷயங்கள் எளிமையாக இருக்கின்றன. குறிப்பாக போட்டோக்களை எடிட் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. தற்போது சாதாரணமான போட்டோக்களை நாம் கிப்லி ஆர்ட் (Ghibli Art)அனிமேஷன் புகைப்படமாக மாற்றுவது சாட் ஜிபிடி மூலம் மிகவும் எளிமையாகப்பட்டுள்ளது. நாம் டிஜிட்டல் புகைப்படத்தை பகிர்ந்து கட்டளையிட்டால் போதும் அது நமக்கு அனிமேஷன் ஆர்ட்டாக அந்த போட்டோவை மாற்றி கொடுத்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது பலரும் தங்களுடைய புகைப்படங்களை இதுபோன்ற கிப்லி ஆர்ட் படங்களாக மாற்றி பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். ஜப்பானில் தான் இந்த கிப்லி ஆர்ட் என்பது பிரபலமானது. பிரபல ஜப்பானிய இயக்குனர் தான் இந்த கிபிலி ஆர்ட்டை உருவாக்கியவர்.
சிறுவயதில் விமானம் ஓட்டுவது போலவும் ஆகாயத்தில் பறப்பது போன்றும் கற்பனை கண்டு அதனை ஓவியமாக வரைந்திருக்கிறார். பின்னர் அதுவே அவரது வாழ்க்கையாக மாறியது. அப்படி 1985 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களோடு இணைந்து ஸ்டூடியோ கிப்லி என்ற அனிமேஷன் நிறுவனத்தை அவர் தொடங்கினார். கிப்லி ஆர்ட் அனிமேஷனில் திரைப்படமாகவும் எடுக்க தொடங்கினார். அந்த வகையில் தான் இந்த கிப்லி ஆர்ட் உலகம் முழுவதும் பிரபலமானது. சாட் ஜிபிடியில் இந்த வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால் பணம் செலுத்தி பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது. ஆனால் தற்போது இலவசமாக சாட் ஜிபிடியை பயன்படுத்துபவர்களும் கிப்லி ஆர்ட்டை உருவாக்கலாம்.
சாட் ஜிபிடியை இலவசமாக பயன்படுத்து பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று கிப்லி ஆர்ட் புகைப்படங்களை மட்டுமே உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சாட் ஜிபிடி இணையதளம் அல்லது செயலிக்கு செல்ல வேண்டும் அதில் இடது பக்கம் மூலையில் இருக்கும் ‘+’ குறியீட்டை கிளிக் செய்து போட்டோவை அப்லோடு செய்யவும் இதனை அடுத்து ‘Ghiblify this’ அல்லது ‘turn this image in Studio Ghibli theme’ என கமாண்ட் கொடுக்கவும் உங்களின் படத்தை அது கிப்லி ஆர்ட்டாக மாற்றி காட்டும் பின்னர் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Also Read
சாட்ஜிபிடி மட்டுமில்லாமல் கூகுளின் ஜெமினி, எலான் மஸ்கின் கிராக் ஆகிய ஏஐ செயலிகளிலும் கூட நாம் புகைப்படத்தை அப்லோட் செய்து அதனை கிப்லி அனிமேஷன் ஆர்ட் படமாக மாற்ற முடியும். இருந்தாலும் இவை சாட் ஜிபிடியில் கிடைக்கும் அளவுக்கு துல்லியமாகவும் கவரக்கூடிய வகையிலும் இல்லை என பயனாளர்கள் கூறுகின்றனர். சாட் ஜிபிடியின் இந்த புதிய வசதியை பயன்படுத்தி உலக அரசியல் தலைவர்கள் ,பிரபலங்களின் படங்கள் கூட இப்படி கிப்லி ஆர்ட் படமாக மாற்றப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
