மதுபானக் கடைகளின் திறக்கும் நேரத்தில் மாற்றம்

சனிக்கிழமை முதல் மதுபானக் கடைகளின் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மதுக்கடைகள் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.

சரிசெய்யப்பட்ட திறக்கும் நேரங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்திற்கு, இணைக்கப்பட்ட திருத்தங்களின் பட்டியலைப் பார்க்கவும்.

ஹோட்டல்களுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு அமையஇ காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும்இ சில ஹோட்டல்களுக்கு அதிகாலை 2 மணி வரையிலும் வெவ்வேறு நேர அட்டவணையின் கீழ் திறந்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய வௌிநாட்டு மதுபான விற்பனை நிலையங்களை காலை 10 மணி முதல் இரவு 09 மணி வரை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பட்டியல் சிங்களத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.