நாட்டின் சில பகுதிகளில் நாளை மழைக்கான வாய்ப்பு!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக அந்த திணைக்களத்தினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் எனவும், அதிகாலை வேளையில் நாட்டின் பல இடங்களில் ஆங்காங்கே பனிமூட்டம் காணப்படலாம் எனவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.