
எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும்
நாட்டில் நிலவும் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் (CPPBOA) தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு எரிபொருள் நிரப்பு நிலைய டீலர்களால் உருவாக்கப்பட்டதே எனவும், விநியோகஸ்தர்களால் தேவையான எரிபொருள் இருப்புகளுக்கான ஓர்டர்களை வழங்குவதில் தவறியமையே பிரதான காரணம் எனவும் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி மேலும் குறைக்கப்படும் என விநியோகஸ்தர்கள் 1 ஆம் திகதி எதிர்பார்த்திருந்துள்ளனர்.
இருப்பினும், எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாததால், தற்போது டீலர்கள் மீண்டும் ஓடர் செய்யத் தொடங்கியுள்ளனர், என தெரிவித்துள்ளார்.
