வீட்டின் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மீட்டர் வாசிப்பாளர் மீது தடியடி

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் தனது வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து, மின் மீட்டர் வாசிப்பாளர் ஒருவர் மீது தடியடி நடத்தப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மீட்டர் வாசிப்பாளர் ஹலவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹலவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.