மின் உபகரணங்களின் தரம் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில், வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, மின் விசிறிகள், மின்விளக்குகள் ஆகியவற்றின் தரம் குறித்து கவனம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகள், பிரதான வீதிகள், கிராமிய வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கு தரநிலைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.