மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

இதன்படி, இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றுக்கு வந்து உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்திருப்பதன் மூலம் இந்த பிரச்சனை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உபகுழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் தெரியவந்துள்ளது.