இலங்கையின் சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி{Citizens Development Business Finance PLC (CDB)}, 41ஆவது மெர்கன்டைல் அத்லெடிக் ஃபெடரேஷன்{Mercantile Athletic Federation (MAF)} தடகளப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் ஒட்டுமொத்த சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் திகதி வரை தியகம மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் CDB சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது.
CDB அணி ஆடவர் ஒட்டுமொத்த சம்பியன், மகளிர் ஒட்டுமொத்த சம்பியன் மற்றும் ஆடவர் ஆரம்பநிலை (Novices) ஒட்டுமொத்த சம்பியன் பட்டங்களையும் கைப்பற்றியது. போட்டியின் ஆரம்பம் முதலே CDB வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் முன்னிலை வகித்தனர்.
இதனிடையே, CDB வீரர்கள் போட்டியில் நான்கு புதிய சாதனைகளையும் படைத்தனர். ஆடவர் ஆரம்பநிலை வேக நடை(Race Walk) பிரிவில் கந்தசாமி ஷாம், 30 வயதுக்கு மேற்பட்ட மகளிர் Triple Jump பிரிவில் பக்தி விஜேசிங்க, ஆடவர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல்(Championship High Jump) பிரிவில் கமோட் டி சில்வா மற்றும் மகளிர் சாம்பியன்ஷிப்(Championship) 400 மீற்றர் தடைதாண்டும் ஓட்டம்(Hurdles) பிரிவில் உமயா ரத்நாயக்க ஆகியோர் புதிய சாதனைகளைப் பதிவு செய்தனர்.
மேலும், ஷகிலா விஜேசேகர ஆடவர் ஆரம்பநிலை சிறந்த வீரர் விருதையும், உமயா ரத்நாயக்க மகளிர் சாம்பியன்ஷிப்(Championship) சிறந்த வீராங்கனை மற்றும் மகளிர் சிறந்த வீராங்கனை ஆகிய இரு விருதுகளையும் பெற்றார்.










