வீதி விபத்துகளில் பூனைகள் உயிரிழப்பு : சுவிஸ் கிராம மக்கள் கொந்தளிப்பு

சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் பூனைகளின் மரண சாலையாக மாறிவருவதால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் வாசிகள் மாநில அரசிடம் கோருகின்றனர்.

பீல் (Biel) பகுதிக்கு வெளியே உள்ள ஓர்வின் (Orvin) கிராமத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசல் காரணமாக 12 பூனைகள் உயிரிழந்தன.

குறித்த வீதியில் 20 அல்லது 30 கி.மீ வேக வரம்பை விட அதிகமான வேகத்தில் கார்களை ஓட்டுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சாலை மாநில அதிகார வரம்பிற்குள் வருவதால், மாநிலத்தின் முடிவாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், ஆனால் மாநில சாலை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், போக்குவரத்து நடைமுறை தேவையற்ற முறையில் பாதிக்கப்படும் என்பதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.