
மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
கடந்த அரசாங்க காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற இயற்கை உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 130 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாடு, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து அன்றைய தினம் அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
