சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்து

-மஸ்கெலியா நிருபர்-

சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில், நோட்டன் லக்சபான பகுதியில் இடம் பெற்றுள்ளது, என நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர், மீண்டும் காலி பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வேளை, நோட்டன் லக்சபான பகுதியில் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காரில் சென்ற நான்கு பேரில், மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம்,  என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.