சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்துகள்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதியானது சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 225,000 அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் அமெரிக்காவின் டே சான்ஸ் செரிடீஸ் தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்