பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு
-கிண்ணியா நிருபர்-
பெண்களுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துதல் தொடர்பிலான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் வழிகாட்டுதலுக்கிணங்க ‘ஜனனி’ திட்டம் எனும் கருப்பொருளின் கீழ் இடம் பெற்றது.
சிவில் சமூக பெண் பிரதிநிதிகளுக்காக இடம் பெற்ற குறித்த செயலமர்வில் பெண்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனை, வெறுக்கத்தக்க பேச்சு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பரந்துபட்ட தெளிவினை வளவாளராக கலந்து கொண்ட உதவி தேர்தல் ஆணையாளர் பண்டார மாபா தெளிவுபடுத்தினார்.
நாளாந்தம் பெண்கள் பலவாறாக பாதிக்கப்படுகிறார்கள் இதில் இருந்து மீளவும் தகவல் தொழில் நுட்ப ஊடாக புதிய அறிவினை வளப்படுத்திக் கொள்ளவும் இந்த திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் கெபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம்.ராபில், பெண் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.